• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

July 19, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தளவில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் தலா 9 செ.மீ., அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க