September 21, 2020
தண்டோரா குழு
வட மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும்,சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் பலத்தகாற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு, மத்திய மேற்கு கடலோரப் பகுதிகள்,தென் கிழக்கு, மத்திய கிழக்கு, பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.