July 5, 2020
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனின் வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது. இதற்கிடையில் இவரது மகள் மதுரை சென்று வந்ததால் கடந்த 29 ம் தேதி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.இதில், அம்மன் அர்ச்சுணனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.