June 30, 2020
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருமகன் மற்றும் பேத்தி என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்,கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் மதுரையில் இருந்து நேற்று கோவை திரும்பிய நிலையில், இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மூவரும் கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.