• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் கமல் வாக்கு சேகரிப்பு !

March 19, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். 15 ஆம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு உள்ள கமல்ஹாசன் பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு, முறையாக குப்பைகள் அகற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த கமல்ஹாசன், வீதி வீதியாகச் சென்று அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வீதி வீதியாகச் சென்று மக்களிடையே பேசி வாக்கு சேகரித்த கமல்ஹாசன் தான் வெற்றி பெற்றால் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க