• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை துடியலூரில் ஏவி (AVIE) என்னும் பெண்களுக்கான பிரத்யேக ஆடை உலகம் துவக்கம்

March 15, 2021 தண்டோரா குழு

கோவை துடியலூரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஏவி என்னும் பருத்தி ஆடையில் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் விற்பனை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதனை கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். லலிதா ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இது குறித்து இயக்குனர் சுகன்யா கூறுகையில்,

ஏவி எனும் எங்கள் ஆடை நிறுவனம் சொந்த முயற்சியால் அனைத்து ஆடைகளும் பருத்தி உற்பத்தியில் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. இங்கு பெண்களுக்கான சுடிதார், பைஜாமா, பட்டியாலா டெனிம், குர்டிஸ், பலாஸ்ஸோ, போலோ டி ஷர்ட்ஸ், சாக்ஸ், லெகிங்ஸ், சால்வைகள், டி ஷர்ட்ஸ், டேனிம் பேன்ட், வெஸ்டர்ன் டாப்ஸ் போன்ற அனைத்து விதமான ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எங்களது முதல் கிளையை தற்போது துடியலூரில் துவக்கியுள்ளோம். அடுத்த மாதம் சென்னை மற்றும் அடுத்தடுத்து கிளைகளையும் விரைவில் துவங்க உள்ளோம் என்றார். மேலும் ஆன்லைன் மூலம் எங்களது பிரத்யேக ஆடைகளை மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாகவும், www.avie.co.in என்ற இணையதளத்தில் எங்கள் நிறுவனங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு நிறுவனர் நிரஞ்சன் பட்டேல், நிர்வாக இயக்குனர் ரமேஷ் சுகன்யா மற்றும் மேலாளர் பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க