• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சொட்டு நீர்ப்பாசனம் குறித்து சிறப்பரை

November 7, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியில் தற்போது நிலவி வரும் சவால்களை சமாளிக்கும் வகையில் சொட்டு நீர்ப்பாசனத்தை உபயோகிப்பது குறித்த சிறப்புரை இன்று நடைப்பெற்றது.இச்சிறப்புரை தெலுங்கான பல்கலைக்கழக துணைவேந்தர் பிரவீன்ராவ் நிகழ்த்தினார்.

இந்தியாவின் மொத்த பாசனப் பரப்பில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசன
முறைகளை உள்ளடக்கிய நுண்ணிர் பாசன முறைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவற்றில்
தெளிப்பு நீர்ப்பாசனம் 18 சதவீமும் சொட்டு நீர்ப்பாசனம் 4 சதவீதமும் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் சிவனப்பன்
அறக்கட்டனை நிதியிலிருந்து ஒவ்வொரு வருடமும் இவ்வுரையை நீர் நுட்ப மையமும்
முதுநிலைக் கல்வி இயக்குநரகமும் ஏற்பாடு செய்து வருகின்றன.

சொட்டுநீர் பாசனம் குறித்து பிரவீன்ராவ் கூறுகையில்,

சொட்டுநீர் பாசன பரப்பளவு இந்தியாவிலே 4 சதவீத அளவு மட்டுமே இருக்கிறது.மேலும் 54 சதவீத நிலத்தடி நீர் வளம் குன்றி வரும் நிலையில்,சொட்டுநீர் பாசனத்தின் மூலம் 15 முதல் 30 சதவீதம் வரை அதிக மகசூல் முடியும் என்பதை வலியுறுத்தி வரை 90 சதவீதம் வரை நீர் வீணாவது தடுக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பாசன
நீரின் முக்கியத்துவத்தையும் இன்றைய காலக்கட்டத்தில் நீரை சேமிக்கும் முறைகளைக் கையாள
வேண்டியதன் அவசியத்தையும் பற்றி தெரிவித்தார்.

இவ்விழாவில் இந்த அறக்கட்டளையை நிறுவ நிதியுதவி அளித்த நீர் நுட்ப மைய முன்னாள்
இயக்குநரும் வேளாண் பொறியில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முன்னாள்
முதல்வருமாகிய பேராசிரியரும் சிவனப்பன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க