• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

November 20, 2020 தண்டோரா குழு

கோவை பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் அரியர் தேர்வு எழுத வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மகன் நவீன்குமார் (22). கோவை ஒத்தக்கல்மண்டபம் அருகே உள்ள பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.தற்போது கொரோனா காரணமாக ஆன் லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வு எழுத கடந்த 5 நாட்களுக்கு முன் தனது தாயுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

மேலும் நவீன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மன உலைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.இதனால் மூன்று நாட்கள் நவீனுடன் அவரது தாயார் தங்கி உள்ளார்.இந்நிலையில் நேற்று காலை நவீனின் தாய் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் மாலை நவீன் செல்போனுக்கு அழைத்துள்ளார். நீண்ட நேரம் போனை எடுக்காத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவலை கூறியுள்ளார். அப்போது அவர் சென்று பார்த்த போது நவீர்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் செட்டிபாளையம் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.பின் அங்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க