• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜி.எம் நகரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு

July 22, 2020 தண்டோரா குழு

கோவையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏறபட்டது. குடிநீர் திறந்துவிடுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கோவையில் உக்கடம் GM நகர் பகுதிகளில் சரியான முறையில் குடிநீர் வராத காரணத்தால் அப்பகுதி மக்கள் குடங்களுடன் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலிசார் சமரச பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். உக்கடம் பகுதியில் அடந்த 15 நாட்களாக சரியான முறையில் குடிநீர் விடுவதுமில்லை எனவும் இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் பகல் நேரத்தில் தண்ணீரை விடுவதற்கு பதிலாக நள்ளிரவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், குறிப்பிட்ட நில நிமிடங்கள் மட்டும் விடுவதால் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதையடுத்து, உக்கடம் சாலையில் 30க்கு மேற்பட்டவர்கள் குடங்களுடன் குடிநீர் விடக்கோரி போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் உக்கடம் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். குடிநீர் விடுவதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து வீடு திரும்பினர்.

மேலும் படிக்க