June 15, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் இ.என்.டி வார்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 9ம் தேதியன்று தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டில் தொண்டைப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரானா உறுதியானது.அதனைத் தொடர்ந்து அவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு மூடப்பட்டது.அதுவரை அந்த வார்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மருத்துவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது அதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து இன்று முதல் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்படுகிறது.