• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை -சொர்ணூர் ரயில் மீண்டும் இயக்கம்

July 9, 2022 தண்டோரா குழு

கோவையில் இருந்து சொர்ணூர் வரை செல்லும் மெமு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 11ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர கோவையில் இருந்து காலை 11.20 மணிக்கு கிளம்பும் மெமு ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூரைச் சென்றடையும். இதேபோல், ஜூலை 11ம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை தவிர) சொர்ணூரில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையார், கஞ்சிக்கோடு, பாலக்காடு, பர்லி, மாங்கரை, லக்கிடி, பலப்புரம், ஒட்டப்பாலம், மன்னனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க