September 6, 2020
தண்டோரா குழு
கோவை செட்டி வீதி அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது.தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், கோவை செட்டி வீதி பெத்தாக் கவுண்டர் மருத்துவமனை அருகே உள்ள கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.