• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி 5வது முறையாக உலக சாதனை

January 13, 2024 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ராஜ் மற்றும் இசைவாணி தம்பதியர் இவர்களுக்கு அகல்யா(7) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அகல்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலம்பம் கற்று வருகிறார். இந்த இரண்டு வருடத்தில் சிலம்பம் சுற்றி இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் வைட் ரெக்கார்ட், ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற 4 உலக சாதனையை செய்துள்ளார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற லின்கன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுமி அகல்யா ஒரு நிமிடத்தில் 100 முறை கண்களை கட்டி மச்சாசனம், சக்ராசனம், ஹாலசனம் ஆகிய யோகாசனங்கள் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி 5வது முறையாக மேலும் ஒரு புதிய உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை லிங்கன் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகம் அங்கீகரித்துள்ளது இதற்கான சான்றிதழை தஞ்சாவூர் மேயர் ராமநாதன் சிறுமி அகல்யாவுக்கு வழங்கினார்.

இது குறித்து சிறுமி அகல்யா கூறியதாவது:

நாம் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை முழு கவனத்தோடு செய்ய வேண்டும் என்று எனது தந்தை கதிர்வேல் ராஜ் கூறுவர் அதன்படி சிலம்பத்தை நான் முழு கவனத்துடன் கற்றுக் கொண்டேன். எனக்கு சிலம்பம் சுற்றுவது மிகவும் இயல்பாக வந்தது. இதனால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு உலக சாதனைகளை புரிந்துள்ளேன். தற்போதுகண்களை கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்து சிலம்பம் சுற்றி மேலும் ஒரு புதிய உலக சாதனை செய்துள்ளேன்.

இனிவரும் நாட்களில் பல்வேறு உலக சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்துள்ளது இது தருணத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்த பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க