• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷிற்கு பொதுமக்கள் தர்ம அடி

April 4, 2019 தண்டோரா குழு

கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை மருத்துவமனையில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சந்தோஷ் குமாருக்கு இன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்மைப் பரிசோதனை செய்வதற்காக சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை (பிரேத கிடங்கு) அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை முடிந்து போலீஸ் ஜீப்பில் ஏறும்போது சுற்றியிருந்த பொதுமக்கள் சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து போலீசார் சந்தோஷ்குமாரை பாதுகாப்பாக ஜீப்பில் ஏற்றி வேகவேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க