• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி,.எம் மையத்தில் தீ விபத்து

January 2, 2019 தண்டோரா குழு

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி,.எம் மையத்தில் தீ விபத்து, ஏ.டி.எம் மையம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

கோவை சிங்கநல்லூர் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. மூன்று ஏ.டி.எம் இயந்திரங்களும் இந்த மையத்தில் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தீடீரென ஏ.டி.எம் மையத்தில் இருந்து புகை கிளம்பி உள்ளது. மேலும் முழுமையாக தீ பிடித்து எரிந்ததாக தெரிகிறது.

அப்போது அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறை மற்றும் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏ.டி.எம் மையம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. தற்போது வரை விபத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை வெளியிடவில்லை. ஏ.சி. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது அப்போது ஏ.டி.எம் மையத்திற்கு வேரு யாராவது வந்தனரா என சிங்கநல்லூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க