• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிங்கநல்லூரில் பட்டாக் கத்தியுடன் சுற்றிய கும்பல் கைது

February 2, 2019 தண்டோரா குழு

சிங்காநல்லூர் அருகே பட்டாக் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாபெரும் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியிருந்த கொள்ளை கும்பலை சிங்காநல்லூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் ஜீ.வி. ரெசிடென்சி தண்ணீர் தொட்டி அருகே நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் சில வாலிபர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

இவர்களை பார்த்த அந்தப் பகுதி மக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான வாலிபர்களை நோக்கி சென்றனர். அப்போது, உஷாரான வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து, உதவி ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் காவலர்கள் சுகுமார், பாலமுருகன், போஸ், அனீஸ், ஆகியோர் தப்பியோட முயன்ற ஏழு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகள், திருடப் பயன்படும் ராடுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல, அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், இவர்கள் கோவையில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, இந்த குழுவினர் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், தற்போது அனைவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக, இந்தப் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இவர்கள் நேற்று மாலை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காவலர் ஒருவர் குற்றம் நடப்பதற்கு முன்பே குற்றவாளியை கைது செய்த நிலையில், மீண்டும் இதுபோன்று குற்றம் நடப்பதற்கு முன்பே கொள்ளை கூட்டக் கும்பல் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் படிக்க