• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு பொருட்காட்சி கண்காட்சி இன்று துவங்கியது

January 5, 2019 தண்டோரா குழு

கோவை கொடிசியா பகுதியில் உள்ள சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் பொருட்காட்சி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி இன்று துவங்கியது.

கோவை கொடிசியா பகுதியில் உள்ள சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு பொருட்காட்சி கண்காட்சி இன்று ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பள்ளியின் தாளாளர் ஆர் நந்தினி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கோவை கிழக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் சுரேஷ் கலந்துகொண்டார்.

இக்கண்காட்சியை குறித்து பள்ளி முதல்வர் உமா கூறுகையில்,

இக்கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது இக்கண்காட்சியில் சமூக அறிவியல், அறிவியல், கணிதம், கணினி, ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்ச் மற்றும் யோகா ஆகிய துறைகளில் மாணவர்கள் தங்களது அறிவுக்கூர்மையை வெளிக்கொணரும் வகையில் தங்களது படைப்புகளை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் மாணவர்கள் அனைத்துத் துறைகளில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட பொருட்கண்காட்சியை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும், விளையாட்டு, இசை, யோகா, தற்காப்பு கலைகள், ஜூனியர் செஞ்சிலுவை சங்கம், சாரண சாரணியர் இயக்கம், மற்றும் தேசிய மாணவர் படை ஆகிய துறைகளில் வெற்றியை நிலைநாட்டியுள்ளனர். மாணவர்களின் இந்த கண்காட்சி பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதனை பெற்றோர்கள் மற்றும் அனைவரும் பள்ளியில் கண்டுகளிக்கலாம் மாணவர்கள் ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை அனைவரும் கண்டு கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஸ்ஹை அகாடமியின் நிறுவனர் சுடர்சன் தலைமையில் மாணவர்களுக்கான ஏரோ மாடலிங் மற்றும் விமான கண்காட்சி நடைபெற்றது.

மேலும் படிக்க