June 27, 2020
தண்டோரா குழு
கோவையின் மத்திய பகுதியில் தினமும் 2000 திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் பல்பொருள் விற்பனை அங்காடியில் பனிபுரிந்து வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.
கோவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியான வணிக வளாகங்கள், கடைகளில் தனி மனித இடைவெளி, கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்று அதன் வீரியத்தை அதிகரித்துக்கொண்டே போகிறது. கோவையின் மத்திய பகுதியான கோவை இரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்ஸ் செட் சாலை அருகே செயல்பட்டு வந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 27 வயது இளைஞருக்கு நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்தபகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பகுதிகளை அடைக்க உத்திரவிட்டு அந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பல்பொறுள் அங்காடிக்கு தினமும் 2000 த்திற்க்கும் மேல் வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் நிலையில் இந்த தகவல் கோவை மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு நாட்களாக இந்த கடைக்கு வந்து சென்ற மக்களை எப்படி அடையாளம் காண்பது என்பது குழப்பமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே யாரும் செல்லவேண்டாம். வெளியே செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் முககவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக செயல்படவும்.