• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றலாம் அருவிக்கு செல்லத் தடை

July 10, 2018 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்,மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக,மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.அணையின் மொத்த கொள்ளளவான 50 அடிக்கு,தற்போது 47.5 அடியாக உயர்ந்துள்ளது நிலையில்,அணை நிரம்பி வழிய இன்னமும் 2.5 அடி உயரமே உள்ளது.

மேலும் படிக்க