• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

May 21, 2019 தண்டோரா குழு

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி குளத்தில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் விளையாடுவதும் குளிப்பதும் வழக்கம். அதே போல இன்றும் காளவாய் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான் தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி உள்ளார். இவருடன் சென்ற சிறுவர்கள் பொற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இனைந்து நீண்டநேரமாக போராடி நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்ததில் அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க