• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட

June 4, 2025 தண்டோரா குழு

கடலில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பருட்டு உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி , சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ நாட்டு அரசு ஊக்குவித்து ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை படகு போட்டி பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது. ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் இந்த சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் 4 வது ஆண்டாக இடம் பெற்றுள்ளனர். மொனாக்கோ நாட்டு அரசு பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாடு மாநிலமான கோவை குமரகுரு கல்லூரியை சேர்ந்த 16 மாணவர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

கடந்த 3 பதிப்புகளிலும் உலக அளவில் 6 வது இடத்தை அடைந்த இந்த மாணவர்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். டீம் சீ சக்தி என்ற பெயரில் யாழி 4.0 எனும் 240 கிலோ எடை கொண்ட படகினை முழுவதும் பால்சா மரம், பிளாக்ஸ் நார் கலவை பொருட்களால் கட்டப்பட்ட இந்த படகு, கார்பன் ஃபைபரை முற்றிலும் நீக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பில் இயங்கக்கூடிய படகை பொறியியல் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தினர். இந்த கட்டமைப்பு தமிழரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் யாழி உருவை உதாரணமாக கொண்டு யாழி 4.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு ஏற்படுத்தாத புதிய கண்டுபிடிப்புகள் மூலம் படகை உருவாகியுள்ளதாகவும், இந்தாண்டு நிச்சயம் போட்டியில் வெற்றி பெறுவோம் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குமரகுரு கல்லூரி மாணவர்களின் மற்றொரு கண்டுபிடிப்பும், சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் பங்கு பெறவுள்ள ரோபோட்டிக் தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த இரு கண்டுபிடிப்புகளையும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கடற்படை கமாண்டர் பாலசுந்தரம் அறிமுகம் செய்தார். வருங்காலங்களில் இந்தியாவில் கடல், ஆறு சார்ந்த போக்குவரத்து 2 மடங்காக பெறுக உள்ள நிலையில், துறைமுகம், கப்பல் கட்டுமானம், பராமரிப்பு அதிகமாகும் என்றும், அதற்காக தற்போது மத்திய அரசு 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய காமோடர் பாலசுந்தரம், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத மாசு ஏற்படுத்தாத இதுபோன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கடற்படைக்கு அவசியம் என்றார்.

மேலும் படிக்க