• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளை கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

October 30, 2019 தண்டோரா குழு

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளை கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவையில் கடந்த 68 ஆண்டுகளாக பல்வேறு தொழில் நுட்பங்களுடன் குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு சாதனையாக 40 படுக்கை வசதிகள் கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக
துவங்கப்பட்டது.

இதற்கான துவக்க விழாவில் புதிய சிகிச்சை பிரிவுகளை கே.என்.சி கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பதி திறந்து வைத்தார். இந்த புதிய தீவிர சிகிச்சை பிரிவில் ஒரே நேரத்தில் பல்வேறு அவசரகால கட்டத்தில் உள்ள 40 நோயாளிகளை சிகிச்சை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கை சுவாச முறை,ரத்த சுத்திகரிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் எக்மோ போன் எனப்படும் உயர்தர சிகிச்சை என அனைத்து வகை சிகிச்சைகளும் நவீன உபகரணங்களோடு செவிலியர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவில் இடுப்பு,பின்முதுகு,தொடை உட்பட எலும்பு தொடர்பான மஜ்ஜை சிகிச்சைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சிகிச்சை பிரிவுகள் குறித்து மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி பேசுகையில், எங்களது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அதி நவீன சிகிச்சைகள் வழங்கும் விதமாக இந்த பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்து நவீன மருத்துவ உபகரணங்களோடு இந்த அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த துவக்க விழாவில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ,மருத்துவ ஊழியர்கள் ,செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க