• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குனியமுத்தூரில் செயின் பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம கொடுத்த பொதுமக்கள்

November 4, 2019 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் MS கார்டன் பகுதியில் செயின் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசில் பிடித்து கொடுத்தனர்.

கோவை குணியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுசீலா வயது 68 இவர் அந்த பகுதியில் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம் அதுபோல் இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாத ஒருவர் வந்து அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து விட்டு, நடந்து சென்றுகொண்டிருந்த சுசீலா என்ற வயதான மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளார். எனினும் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி செயினை பலமாக பிடித்துக்கொண்டு கூச்சல் இட்டதால் செயின் அருந்து பாதிசெயின் மட்டும் திருடனிடம் மாட்டிக்கொண்டது.

சத்தம் கேட்டுவந்த அந்த பகுதி இளைஞர்கள் ஓடிவந்து தப்பி ஓடமுயன்ற திருடனை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திருடனைப்பிடித்து காவல் நிலையம் கொண்டுச் சென்றார். விசாரணையில் அவன் பெயர் அம்சா என்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவருகிறது. மேலும் இவன் கும்பலாக திருட்டு செயல்களில் ஈடுபடுபவனா, இவன் மீது வேறு ஏதாவது வழக்குகள் இருக்கின்றதா. போன்ற பல்வேறு விசயங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,

இந்த பகுதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் நடப்பதாக தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க