• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குனியமுத்தூரில் கிணற்றில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்பு

February 12, 2019 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனயைடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் 18 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு,கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரனையில், இறந்துகிடந்தது குணியமுத்தூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் அசாருதீன் என்பதும், 18 வயதான இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக மன நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வாலிபரின் உடலை மீட்ட குனியமுத்தூர் போலீசார் ,அசாருதீன் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க