• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டுவெடிப்பு அமர்வு நீதிமன்றம் வளாகத்தின் முன்பு குற்றவாளிகளுக்கு கத்திகுத்து

August 27, 2021 தண்டோரா குழு

கடந்த 2020 ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகறாரில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு,கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான விஜயகுமார் மற்றும் மூன்றாவது குற்றவாளியான ஹரிஹரன் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க