• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காளப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

December 28, 2021 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி அருகே ஐடி நிறுவன ஊழியரின்,வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட தனது குடும்பத்துடன் கிறிஸ்டோபர் சோமனூரல் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது,பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கிறிஸ்டோபர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலிசார் வழக்கு பதிவு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க