• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

December 15, 2018 தண்டோரா குழு

கோவை காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வட மாநில மாணவர் அம்பேர் பிரசாந்த் கால்கோ என்பவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவையை அடுத்த ஆலாந்துறையில் காருண்யா பல்கலைகழகம் உள்ளது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவரின் மகன் அம் பேர் பிரசாந்த் கால் கோ (26). இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தேர்வுக்காக தங்கி பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவரது அறை பூட்டி இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஆசிரியருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, விடுதியில் இருக்கும் பொறுப்பாளர்கள் மாணவனின் அறையை தட்டிய போது உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மாணவன் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து,
விடுதி பொறுப்பாளர் காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் வந்த காவல்துறை மாணவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுதிக்குள் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க