March 21, 2018
தண்டோரா குழு
மதுரையில் போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கோவை காந்தி பார்க் முன்பு இன்று(மார்ச் 21)இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் தமிழகத்தில் சட்ட விரோத ஜெபக்கூடங்கள் நடைபெறுவதை தடை செய்யக்கோரியும் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பார்க் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின்போது இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்,போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.மேலும்,அனுமதியின்றி நடைபெறும் ஜெபக்கூடங்களை உடனடியாக தடை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை முழங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.