• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திரபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

November 23, 2018 தண்டோரா குழு

கோவை முக்கிய கடைவீதி பகுதியில் திறக்கப்படவுள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
கோவை காந்திபுரம் 6வது வீதியில் புதிய டாஸ்மாக் கடைக்கான பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அந்த கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பெண்கள் உட்பட 3௦க்கும் மேற்பட்டோர் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவை நகரின் முக்கிய கடைவீதி பகுதியில் திறக்கப்படவுள்ள இந்த டாஸ்மாக் கடையினால், கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும், அந்த பகுதியை கடந்து செல்லும் பெண்கள், அருகில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் இடையூறாக இருக்கும் என்றும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.எனவே, இந்த கடை திறக்கப்படக்கூடாது எனவும், இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரிடம் முறையாக மனு கொடுத்து புகார் தெரிவிக்கும்படி கூறியதை அடுத்து, ஆர்பாட்டத்தை கைவிட்டு, ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர்.

மேலும் படிக்க