October 8, 2025
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இது கோவையில் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் ஆகும். ஷோரூமை திறந்து வைத்து, முதல் விற்பனையை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் துவக்கி வைத்தார். எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் தலைவர் & நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவில் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், ஹீரோ பேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி முக்கிய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.