August 1, 2020
தண்டோரா குழு
கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார்.
உலகின் மிகப்பெரிய மென்பொருள் உருவாக்கும் போட்டியான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நாடு முழுவதும் 40 மையங்களில் நடைபெற்று வருகிறது.இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியானது 36 மணி நேரம் இடைவிடாமல் தொடர் மென்பொருள் வடிவமைப்புகள் மேற்கொள்ளுதல் ஆகும்.
இதில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
கிருஷ்ணா கல்லூரியில் இரண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நான்காம் ஆண்டு எம்.எஸ்.சி படிக்கும் மாணவி ஸ்வேதா சுகாதார அட்டை குறித்தான மென்பொருள் வடிவமைப்பு குறித்து பிரதமரிடம் பேசினார். அதைப்போல் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் குற்றம் பதிவு, குற்றம் குறித்தான விழிப்புணர்வு போன்ற மென்பொருள் வடிவமைப்பு குறித்து பிரதமரிடம் பேசினார்.
தமிழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டிகள் நடைபெறும் ஏழு மையங்களில் கிருஷ்ணா கல்லூரியில் மட்டும் மாணவர்களிடையே பிரதமர் கலந்துரையாடுவது குறிப்பிடத்தக்கது.