• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கற்பகம் கல்லூரியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு பிரிவின் சார்பாக போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்தும் விளக்க நிகழ்ச்சி கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில்,போதைப் பொருள்களால் இளைஞரின் எதிர்காலம் எவ்வாறு பாழ்படுகிறது என்பதை விளக்கினார். மேலும் போதை சம்பத்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்குகிறார்கள் வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டு இது சம்பந்தமாக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் மதுவிலக்கு காவல் துறையினர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க