• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

December 12, 2019

கோவை கரும்புக்கடை பகுதியில் நொய்யல் ஆற்றின் ராஜா வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சாலை அருகே மற்றும் நொய்யல் ஆற்றின் ராஜவாய்க்காலில் உள்ள சுமார் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை காலி செய்யாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பெக்லென் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி வருகின்றனர்.

இராஜவாய்க்காலை 20 அடிக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேரும் நீர் தடைபட்டு மழைக்காலங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மேம்பாலம் பணிகள் நடைபெற்றுவருவதால் சாலை அகலப்படுத்தும் விதமாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள், 500 மீட்டர் தூரத்திற்க்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க காவல்துறை உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் அதிகமான போலீசார் இந்தபகுதியில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க