• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு!

January 12, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஒருவர் போதையில் ரோட்டில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சூலூரை அடுத்த பட்டணம் புதூரை சேர்ந்த சிவராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அங்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த அவர் பேருந்து முன் திடீரென சாலையில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டார்.முதற்கட்ட விசாரணையில்சிவராஜின் உறவினர் ஒருவர் தாக்கியதால் சிகிச்சைக்கு சென்றதாகவும், போதையில் சென்றதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் போதை தலைக்கேறி ஆணையர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்ததும் தெரியவந்தது.

திடீரென சாலையில் படுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க