• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கடை ஓன்றில் லிப்டில் சிக்கி வடமாநில இளைஞர் பலி

June 20, 2017 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் காட்டூர் சோமசுந்தர மில்ஸ் சாலை, என்.டி.சி பஞ்சாலை எதிரே உள்ள காண்டெக் ரப்பர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தீபன் மசான் என்னும் வடமாநில இளைஞர் லிப்டில் சரக்கு ஏற்றி செல்லும் போது மேல் சுவற்றில் அவரது தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீபன் மசானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் அங்கு வடமாநிலத்தை சார்ந்த பல இளைஞர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிபுரியும் இடத்தில் அவர்களது உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் வடமாநில இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்க