April 25, 2020
தண்டோரா குழு
நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில்,இன்று மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும்,நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொது மக்களின் வசதிக்காக, இன்று மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பொருட்களை வாங்கச் செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.