• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உப்பிலிப்பாளையத்தில் 2 இளைஞருக்கு அரிவாள் வெட்டு

May 14, 2019 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் நிலை தடுமாறி மயங்கிவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். தற்போது இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க