February 28, 2021
தண்டோரா குழு
கோவை உக்கடம் ஸ்மார்ட்சிட்டி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்; குடும்பத்துடன் ஐ லவ் கோவை முன்பு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
கோவை உக்கடம் பெரியகுளம் கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூபாய் 62 லட்சம் செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஸ்மார்ட் சிட்டி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பூங்காவுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர் பொதுமக்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக வந்து விளையாடிக்கொண்டும் ஐ லவ் கோவை என்ற வாசகம் முன்பு குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்டோம் உற்சாகமடைந்தனர்.
62.17 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையினை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.உக்கடம் ஸ்மார்ட்சிட்டி குளக்கரை பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அத்திட்டத்தின் கீழ் கோவையில் 5 குளங்கள் உள்ளனர்.அதில் 62.17 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையினை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளுதல் குழந்தைகள் விளையாடும் வசதிகள் உள்ளன என்று கூறிய அவர் இக்குளங்களை தூய்மையாக வைத்து கொள்ள அனைவரும் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இது கோவை மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள நீர் நிலைகள்,நீரை சார்ந்துள்ள உயிரினங்கள் போன்றவை நல்ல முறையில் இருக்க உதவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவித்தார்.