• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 21 மாதத்திற்கு பின் கேரளாவிற்கு பேருந்து இயக்கம்

December 1, 2021 தண்டோரா குழு

கடந்த 21 மாதங்களாக நோய்த்தொற்று காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பயணிகள் பேருந்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் பாலக்காடு திருச்சூர் கொச்சின் மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நோய்தொற்று காலத்தில் அதிகமான பயணிகள் ரயிலில் மட்டுமே பயணம் செய்த நிலையில் தற்போது பயணிகள் பேருந்து இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது,

பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சனிடைசர் கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். கோவை கேரள எல்லையான வாலையார் பகுதிகளில் முகாம் அமைத்து அங்கு நான்கு சக்கர வாகனத்தில் வரும் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். rtpcr சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க