May 8, 2020
தண்டோரா குழு
கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கோவை பழைய இரும்புக் மார்க்கெட் 45 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது, வாடகை, மின் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் மாநகாராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மெளலானா முகமது அலி இரும்பு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் சுமார் 350 கடைகள் உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதால் எப்போது வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படும், பழைய இரும்பு மார்க்கெட், கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டுள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவந்ததால் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில்,தொடர்ந்து 45 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும்,இதனை கருத்தில் கொண்டும் இரண்டு மாதங்களுக்கு வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.