• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு !

October 11, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்து வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஊரடங்கி காரணமாக ஏறத்தாழ ஐந்து மாதகாலம் இந்த நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. கொரோனா ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு மிகப்பெரிய சமூக பொருளாதார உளவியல் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மனித சமூகம் சந்தித்திராத மிகவும் மோசமான இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அரசாங்கத்திற்கு இணையாக சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இணையாக காவல்துறைக்கு இணையாக மக்களுடைய குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்வதும் அரசாங்கத்தினுடைய சட்டங்களை செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது மிகப்பெரிய இணைப்பு பாலமாக செயல்பட்ட ஊடக நண்பர்களை எஸ்டிபிஐ கட்சி இந்த தருணத்தில் பாராட்டுகிறது.

ஏறத்தாழ 250 ஊடகவியலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு 4 ஊடகவியலாளர்கள் தன்னுடைய இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். தங்களது இன்னுயிரை இழந்து ஊடகவியலாளர்களுக்கு எங்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் பிரார்த்திக்கிறோம். பாஜக அரசு தன்னுடைய மிருத பலத்தின் காரணமாகப் பெரும் பான்மை காரணமாக மோசமான சட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள் அதுபோல ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயிகள் வியாபாரிகள் சிறு வியாபாரிகள் என அத்தனை பேரும் தான். தற்போது கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய மசோதாவால் விவசாயிகள் வாழ்வே தலைகீழாக மாறி உள்ளது.

3 சட்டங்கள் மிக மோசமான சட்டங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சட்டங்களின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறிப்போய் விடும் ஏற்கனவே இயற்கை பொய்த்து போய் விட்ட நிலையில் மழை இல்லாமல் விவசாயத்துக்காக பெற்ற கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கின்ற நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மிகப்பெரியதாக பாதிக்கும் விதமாக 3 சட்டங்களும் அமைந்திருக்கிறது. எல்லா கட்சிகளும் எதிர்த்தும் கூட இதுவரை அமல் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனடியாக இந்த மூன்று சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் அத்தோடு பேரிடர் காலத்தில் சட்டங்களை பெரும்பான்மை இல்லாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த தருணத்தில் நிறைவேற்றி இருக்கிறார். அரக்கத்தனமான ஜனநாயக விரோத சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டிய அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தாங்கள் விவசாயிகளே விழித்தெழுங்கள் என்கின்ற தலைப்பில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என மிகப்பெரிய ஒரு பிரச்சார மக்கள் இயக்கத்தை நாங்கள் நடத்த உள்ளோம்.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு இந்துத்துவா வாதத்தை நிலை நிறுத்துகின்ற விதத்தில் யோகி அரசு மிக மோசமான கொடூரமான மனித உரிமை மீறல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் கண்டித்து அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சென்ற மூத்த பத்திரிக்கையாளர் சித்திக் உட்பட 4 பேரை உபி காவல்துறை கைதுசெய்திருக்கிறது. சம்பவத்திற்கு காரணமான அத்தனை குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் நீதிமன்றம் முன்பாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் அத்தோடு யோகி அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் யோகி பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதே போல ஒரு வருடத்திற்கு முன்பு திண்டுக்கலில் கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு முன் சமர்ப்பிக்காத காரணத்தால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இந்த விடுதலை என்பது காவல்துறையின் உடைய கையாலாகத்தனத்தை காட்டுகிறது. இது மாநில அரசினுடைய கையாலாகாத தனம். மிக மோசமாக கொல்லப்பட்ட அந்த சிறுமிக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய அரசு தன்னுடைய கடமையிலிருந்து வழி இருக்கிறது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உயர்நீதிமன்ற பார்வையில் மறு விசாரணை நடத்தி அந்த சிறுமிக்கு நீதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம். இல்லை என்றால் இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் என்று நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். ஜார்கண்ட்
மாநிலத்தில் 60 ஆண்டுகளாக 80 வயதை கடந்து அந்த மாநில மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனித உரிமைத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நமது தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களை சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். மேலும் உதவி பேராசிரியர் சாய்பாபா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஈவிரக்கமற்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை ஆர்வலர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதற்கு எதிரான போராட்டங்களுக்கு எங்கள் கட்சி தோளோடு தோள் கொடுக்கும் என்றும், கூட்டணிகள் குறுத்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க