October 5, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதைப் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோவையில் கடந்த வாரம் மழை அதிகமாக பெய்தால் காரணமாக உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளம் பெரியகுளம் போன்ற பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகளவு வளர்ந்துள்ளது.இதை அறிந்த கோவை மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையாக பொக்லைன் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.அதே சமயம் குளங்களில் கழிவு நீர் கழப்பதால் சுத்தம் செய்யும் வேலையில் துர்நாற்றாம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றன.