• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் குளக்கரையில் மக்களை கவரும் ஐ லவ் கோவை செல்பி கார்னர் !

June 5, 2020 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மீண்டும் வேகப்படுத்தி உள்ளன. கோவை உக்கடம் குளக்கரையில் செல்பி கார்னர் அமைக்கும் பணி நடக்கிறது. இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன.இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப் பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒன்பது குலங்கள் மேம்படுத்த படுகின்றன.இதில் உக்கடம் பெரியகுளம் ஒரு பகுதி மற்றும் வாலாங்குளம் ஒரு பகுதியில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த மார்ச் மாதமே பணியை முடித்து கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது.ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் முடங்கின தற்போது தளர்வு வழங்கப் பட்டுள்ளதால் இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன குளக்கரையில் ஐலவ்யு கோவை என ஆங்கில எழுத்துக்களால் செல்பி கார்னர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சி அதிகாரி கூறும்போது,

கோவையில் உள்ள ஒன்பது குலங்கள் ரூபாய் 3 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக உக்கடம் பெரியகுளத்தில் 1.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதை,நடைப் பயிற்சிக்கான வழி சைக்கிள் பாதை குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் படகு சவாரி திறந்தவெளி அரங்கம் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கான தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்னும் இரு மாதங்களுக்குள் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் படிக்க