• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் அருகே மீன் மார்கெட்டில் பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு

May 27, 2019 தண்டோரா குழு

கோவை உக்கடம் அருகே மீன் மார்கெட்டில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலி பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம். இவர் நேற்று காலை தனது மகனுடன் உக்கடம் மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்குவதற்காக வந்தார். அப்போது ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்க கூடிய பகுதியில்
திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் ரஞ்சிதம் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் திருடனை பிடிக்க துரத்தி சென்றனர். ஆனால் அதற்குள் திருடன் அங்கிருந்த தப்பி சென்றான். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சங்கிலி பறிப்பை தடுக்க போலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சங்கிலியை பறித்து சென்ற காட்சி அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக உக்கடம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க