April 29, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடத்தில்மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு லட்சுமி நாயக்கர் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 42). பெயிண்டர். இவருடைய மனைவி ஜொகரா(வயது 37).இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று அதிகாலை கோவையில் பலத்த மழை பெய்தது. ஜொகரா காலை 5 மணியவில் துணி காயப்போட சென்றார். அந்த பகுதியில் மின்சார வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக தொங்கிக்கொண்டு இருந்தன.மழை நீரினால்மின்சாரம் கசிந்துள்ளது.அப்போது துணி காயப்போட்ட ஜொகரா தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையற்று கிடந்தார்.
இதையடுத்து,அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.சம்பவ இடத்துக்கு உக்கடம் போலீசார் மற்றும் தெற்கு தாசில்தார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.குறுக்கும், நெடுக்குமாக செல்லும் மின் வயர்களை ஒழுங்குபடுத்துமாறு மின்வாரிய ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கோட்டைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.