August 15, 2020
தண்டோரா குழு
கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முத்துராமன் சிங்கப் பெருமாள் அவர்களின் பரிந்துரைப்படி பொதுச்செயலாளர் தவத்திரு ஈஸ்வர சுவாமிகள் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் விஸ்மயா வேணுகோபால் ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தனர்.
பின்னர் பள்ளி மாணவ மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் நோட்டு புத்தகங்கள் இனிப்புகளை வழங்கினர். இவ்விழாவில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் சாந்தினி வேணுகோபால் மற்றும் கழக செயலாளர் வாசுதேவன், கோவை மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் செல்வராஜ், கழக நிர்வாகிகள் சங்கரன், உதயகுமார், சுந்தர் ராஜன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுமதி, சிங்கை தொகுதி மகளிர் அணிச் செயலாளர் நீலவேணி,சூலூர் சட்டமன்ற மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, தொண்டாமுத்தூர் மகளிர் அணிச் செயலாளர் இந்துமதி,அவிநாசி சட்டமன்ற செயலாளர் ஜீவிதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.