• Download mobile app
11 Dec 2025, ThursdayEdition - 3592
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிளானட் பிரஸ் எனும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கடை திறப்பு !

December 11, 2025 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் பிளானட் பிரஸ் என்னும் காய்கறிகள் மற்றும் பழங்கள்
கடை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ஏ1 சிப்ஸ் நிர்வாக இயக்குனர் முரளி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

முதல் விற்பனையை எம்.எம்.ஜி குளோபல் குரூப் ஆஃப் கம்பெனியின் கணேசன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து பிளானட் பிரஸ் உரிமையாளர்கள் வினு கே நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தார்கள்,சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இது குறித்து பிளானட் பிரஸ் உரிமையாளர் கூறுகையில்,

எங்களது கே நாராயணன் சன்ஸ் நிறுவனம் 75 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். முன்பு மொத்த வணிகம் செய்து வந்தோம். தற்போது கோவை ஆர்.எஸ் புரத்தில் பிளானட் பிரஸ் என்ற புதிய கிளையில் சில்லறை வணிகத்தை துவக்கி உள்ளோம். இங்கு நம்பர் ஒன் குவாலிட்டி காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம்.100% காய்கறிகளை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

வேறு எங்கும் கிடைக்காத காய்கறிகளும் எங்களிடம் கிடைக்கும்.ஊட்டி காய்கறிகள், சைனீஸ் காய்கறிகள்,வடநாட்டு காய்கறிகளும் மற்றும் அனைத்து வகையான பழங்களும் எங்களிடம் கிடைக்கும்.அது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு இலவச டோர் டெலிவரையும் செய்து தருகின்றோம்.

மேலும் விசேஷங்களுக்கும் 90953 99999 என்ற எண்னில் எங்களை அணுகலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க