September 14, 2020
தண்டோரா குழு
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் படுகொலையை கண்டித்து அக்கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் இராஜலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில். கூலிப்படையை ஏவி படுகொலை செய்த குற்றாவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில்கோவை மாநகர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர்குரு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சங்கர் குரு, ராஜலிங்கத்தை படுகொலை செய்த இராஜபாளையம் முருகையா பாண்டியன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.