May 2, 2020
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
திடீரென வட மாநிலத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு இரயிலில் செல்ல ஆதார் எண் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல் வந்ததாக கூடியுள்ளனர். ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை என போலிசார் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் சேர்வதை தவிர்த்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வட மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டதுடைய எதிரொலியாக இந்த கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.