• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகள்களுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

April 29, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வந்த ஒருவர் திடீரென அவர்கள் மீதும் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். தனது மனைவி மற்றும் 16 மற்றும் 18 வயதான இரண்டு பெண் பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தனது வீட்டிலேயே ஆடு மற்றும் நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவர் அவற்றை விற்று அன்றாடம்
பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டிய காவல் துறை அதிகாரி ஒருவர் ஆடு மற்றும் நாய் வளர்ப்பினால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி செல்வராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் அச்சம் அடைந்த செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று எண்ணியுள்ளார்.

என்ன செய்துவது என்று அறியாமல் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது திடீரென தான் கொண்டு வந்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது பிள்ளைகள் மனைவி மற்றும் தன்மீதும் ஊற்றி திடீரென தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அவர் கையிலிருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோலை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர், தகவலறிந்து அங்கு வந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் 4 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வந்த காவல்துறை அதிகாரி செல்வராஜை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் காவல்துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் தன் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தின் பேரிலேயே அவர் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க